கோவை மாவட்டத்தின் மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் 13.02.2011(ஞாயிற்றுக்கிழமை) அன்று மாவட்ட தலைவர் ஜலால் அஹ்மத் அவர்கள் தலைமையில் மாவட்ட மாணவரணி செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில்  சமீம் அவர்கள் கலந்து கொண்டு புதிதாக வந்த மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

மேலும் மாணவர்களுக்கு தொடுத்த கேள்விகளுக்கு எளிய நடையில் உரிய முறையில்  மௌலவி தாவூத் கைசர் அவர்கள் பதிலளித்தார்கள்.

இறுதியாக கிளை மாணவரணி செயலாளர்கள் மற்றும் மாணவரணி செயல்வீரர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இதில் சமீம் அவர்கள் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஜும்மா தொழுகை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நம் மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஜும்மா தொழுகை நடத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பாக செய்து தரப்படும் என்பதை மாவட்ட மாணவரணி செயலாளர் மாணவர்களிடம் தெரிவித்தார்.

இதில் புதிதாக வந்த 30 மாணவர்கள் உட்பட எழுபதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது.