கோவை மாணவர் அணியின் தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மாணவரணியின்  தர்பியா நிகழ்ச்சி கடந்த 27-7-2011 அன்று நடைபெற்றது. இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் அஜ்மல் தர்பியா குறித்து உரையாற்றினார்கள்.

மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பாளர் அப்துல் அஜீஸ் மாணவர்கள் மத்தியில் “பொறுப்பு வழங்கபட்டோரின் மறுமை நிலை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பின்னர் மாணவர் அணியின் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
இதில் மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள், கிளை மாணவரணி செயலாளர்கள், உட்பட 30 பேர் கலந்து கொண்டனர்.