கோவை மாணவரணி சார்பாக முதியோர் இல்லத்திற்கு திரட்டப்பட்ட ரூபாய் 15,500

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் மாணவரணியின் சார்பாக தாவா சென்டர்,முதியோர் இல்லம் மற்றும் அநாதை இல்லம் ஆகியவற்றுக்கு ரூபாய் 15,500 வசூல் செய்யப்பட்டது. பொருளாதாரத்தை முதல் நோக்கமாக கொள்ளாமல், நம் ஜமாத்தின் பணிகள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாக கொண்டு, நம் ஜமாத்தின் பணிகள் சென்றடையாத இடங்களிலும், நம் ஜமாத்திற்கு அதிகம் எதிர்ப்பு உள்ள இடங்களிலும் ஒவ்வொரு வீடாக சென்று நம் ஜமாத்தின் தாவா சென்டர், முதியோர் இல்லம், அநாதை இல்லம் ஆகியவற்றை பற்றி எடுத்துரைத்து அவர்களால் இயன்றது ரூபாய் பத்து ஆகவும், ரூபாய் இருபதாகவும் பெறப்பட்டது தான் இந்த தொகை…

இந்த பணியில் மாவட்ட மாணவரணி செயலாளர் அஜ்மல் தலைமையில், மாணவரணி செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.. அல்ஹம்துலில்லாஹ்… இந்த தொகையானது பொறுப்பாளரும், மாவட்ட துணைதலைவருமாகிய சஹாப்தீன் அவர்களிடம் கடந்த 11-9-2011 ஒப்படைக்கப்பட்டது.