கோவை போத்தனூரில் நடைபெற்ற முஹர்ரம் மாதம் குறித்த மார்க்க விளக்கக் கூட்டம்

DSCF0073DSCF0070 (1)DSCF0062DSCF0065தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் போத்தனூர் கிளையின் சார்பாக 26-12-2009 சனிக்கிழமை 7 மணிக்கு முஹர்ரம் மாதம் குறித்து மற்றும் மதரசா குழந்தைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் கோவை மாவட்ட பேச்சாளர் சகோதரர். மேட்டுபாளையம் அப்துல் ரஷீத் அவர்கள் முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் மூடநம்பிக்கைகளும் அதை உக்குபடுதும் மார்க்க அறிஞர்களின் நிலை பற்றியும் “மூடநம்பிக்கையும் கல்வியின் அவசியமும் என்ற தலைப்பில் உரையாற்றினர் .

அதன் பிறகு சேலம் தவ்ஹீத் கல்லூரி பேராசிரியர். மௌலவி. லுக்மான், அவர்கள் மூசா நபியின் தியாகமும் அதன் முலம் நாம் பெற வேண்டிய படிப்பினையும் என்ற தலைப்பில் உரையாற்றினர்.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் போத்தனூர் கிளையின் மதராஸாவான மதரசத்துள் அக்ஸாவில் பயிலும் 80 மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை கிளை தலைவர் முஸ்தபா மற்றும் மாவட்ட தலைவர் முஹம்மது அலி அவர்கள் வழங்கினர்.

அரசு நலத்திட்டங்கள் பெறுவது எப்படி என்பதை பற்றி மாவட்ட பொருளாளர் சகோதரர் நவ்சாத் விளக்கினார்.

போத்தனூர் கிளையின் துணை செயலாளர் சகோதரர். இர்பான் நன்றியுரை கூறினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்களும் , ஆண்களும் , குழந்தைகளும் கலந்துகொண்டனர்.