கோவை போத்தணூர் கிளையில் காதியாணிகள் குறித்து நடைபெற்ற தர்பியா முகாம்!

DSC00125DSC00124காதியாணிகளின் பிரச்சாரத்தை முறியடிப்பதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போத்தணூர் கிளையின் சார்பாக
03-01-2010 ஞாயிற்றுகிழமை அன்று காலை 11 மணி முதல் 5 மணி வரை காதியாணிகளிடம் பிராச்சாரம் செய்வதின் அணுகு முறை பற்றியும் அவர்களின் பிரச்சாரத்தை முறியடிப்பது எப்படி என்ற தலைப்பில் மௌலவி.கைஸர் அவர்களும் மௌலவி. யூசுப் பைஜி அவர்களும் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர்.ஆனைமலை இத்ரிஸ் அவர்கள் வரலாறு தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி போத்தணூர் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில் வைத்து நடைபெற்றது.

கோவை மாவட்டத்தின் பல கிளைகளிலிருந்தும் சுமார் 50 பேர் கலந்து கொன்டனர்.

நிகழ்ச்சியின்; இறுதியில் காதியாணிகளின் பிரச்சாரத்தை முறியடிப்பது பற்றி ஆதிகமான தகவல்களுடன் கலைந்து சென்றனர்.