தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் செல்வபுரம் வடக்கு கிளையின் நூலகம் திறப்பு நிகழ்ச்சியின் பொதுக்கூட்டம் 20.12.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 7-மணிக்கு (மார்க்கவிளக்கப்பொதுக்கூட்டம்-அரசின்நலத்திட்ட உதவிகளை பெறுவது எப்படி) செல்வபுரம் 60-அடி ரோட்டில் நடைபெற்றது.
மாவட்டபேச்சாளர் சித்தீக் உரை நிகழ்த்த, மாவட்ட பொருளாளர் நவ்சாத் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது எப்படி என்று உரை நிகழ்த்த, மாநிலத்தலைவர் பக்கீர்முஹம்மத் அல்தாஃபி மறுமையில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பெருந்திரளாக ஆண்களும் பெண்களும் இதில் கலந்து கொண்டனர்.