கோவை சாரமேட்டில் நடைபெற்ற மீளாது விழா எதிர்ப்பு பொதுக்கூட்டம்

கோவை சாரமேடு பகுதியில் கடந்த வாரங்களில் மீலாது விழாக் கொண்டாட்டங்கள் களைக்கட்டியது. இந்த முறை மிகவும் கொச்சையாக தவ்ஹீத் வாதிகளையும், நாம் கடைபிடிக்கும் சுன்னத்களையும் விமர்சித்தனர். இச்செயல்களை கண்டிக்கும் வண்ணமாக அதே பகுதியில் அமைந்துள்ள TNTJ கிளையின் சார்பாக மாபெரும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு TNTJ சாரமேடு கிளை தலைவர் கலீல் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் “சுன்னத் ஜமாஅத்தினர் யார்” என்ற தலைப்பில் TNTJ மாவட்ட பேச்சாளர் சகோதரர்: அப்துல் ரஷீத் உரை ஆற்றினார்.இதனை தொடர்ந்து TNTJ மேலாண்மை குழு உறுப்பினர் சகோதரர்:கோவை அப்துர் ரஹீம் அவர்கள் “இது தான் இஸ்லாம்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்- அல்ஹம்துலில்லாஹ்!