கோவை கோட்டை கிளையில் நடைபெற்ற கண் தான நிகழ்ச்சி

IMG_0080IMG_0094IMG_0107தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  கோவை மாவட்டம் கோட்டை கிளையின் சார்பாக கடந்த ஞாயிற்றுகிழமை(07-02-2010) மாலை 7:00 மணியளவில் கண் தான நிகழ்ச்சி கோட்டை மேடு பெருமாள் கோவில் வீதியில் வைத்து நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் ஹாஜா நஜ்முத்தீன் தலைமை தாங்கினார்.மாவட்ட பேச்சாளர்  நாசர் அவர்கள் சமுதாய பணிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பங்கு என்ற தலைப்பிலும் வாசன் கண் மருத்துவமனை மண்டல தலைவர். தமிழ்செல்வன் அவர்கள் கண் தானம் செய்யும் முறை பற்றியும் விரிவாக விளக்கினார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மொத்தம் 184 நபர்கள் கண் தானம் செய்ய ஒப்பு கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது. இறுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மை குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் இஸ்லாமிய பார்வையில் கண் தானம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் துறை துனை கமிஷ்னர். நாகராஜன் அவர்கள் கோவை காவல் துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.