கோவை காரமடை சாஸ்திரி நகர் கிராமத்தில் நடைபெற்ற தஃவா நிகழ்ச்சி

P2070019

P2070019P2070002P2070016கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள TNTJ காட்டூர் கிளையின் சார்பாக பல்வேறு தாவா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஞாயிறு 11/02/2010 அன்று TNTJ காட்டூர் கிளையின் சார்பாக காரமடை அருகில் அமைந்துள்ள சாஸ்திரி நகர் கிராமத்தில் தாவா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு காரமடை கிளை பொருளாளர் சகோதரர் ஜாபர் அவர்கள் தலைமை தாங்கினார்கள். காலை 11 மணிக்கு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் TNTJ காட்டூர் கிளை தலைவர் சகோதரர்: அப்துல் ரஷீத் அவர்கள் “இஸ்லாம் ஒரு அறிமுகம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

அதனைத் தொரடர்ந்து மக்களுக்கு கேள்வி கேட்க அவகாசம் அளிக்கப்பட்டது. சுமார் 2.5 மணி நேரம் நீடித்த இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் மக்கள் இஸ்லாம் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு தமது ஐயங்களை போக்கிக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இறுதியாக மக்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது. இது காட்டூர் கிளையின் சார்பாக நடத்தப்படும் 3வது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது – அல்ஹம்துலில்லாஹ்.

இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை TNTJ காட்டூர் கிளை மற்றும் காரமடை கிளை சகோதரர்கள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.