கோவை காரனூர் கிராமத்தில் நடைபெற்ற தஃவா நிகழ்ச்சிகள்

karanur_page_2copy-of-karanur_page_2இறைவனின் மாபெரும் கிருபையினால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னால் சத்திய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்,சிறுமுகை,காரமடை பகுதிக்கு மிக அருகில் உள்ள காரனூர் என்ற கிராம மக்கள் வழி காட்டுதல்கள் இல்லாமல், செல்லவேண்டிய பாதை காட்டப்படாததால் திரும்பிய சென்றுவிடலாமா என்ற கேள்விக்குறியோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற வேதனையான செய்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்த உடன் கடந்த 10 நாட்களுக்கு முன்னால் நேரில் சென்று அவர்களுக்கு உரிய தற்போதைய தேவை என்ன என்பதை கேட்டு அதற்குரிய பணியை துவங்கினர்.

அதன் தொடர்ச்சியாக 18.10.2009 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை அந்தப்பகுதியில் நடைபெற்ற விருந்துடன் கூடிய மாற்றுமதத்தினருக்கான தாவா பணி சிறப்பாக நடைபெற்றது, ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட நிர்வாகிகளும்,அருகில் இருக்ககூடிய கிளை சகோதரர்களும், மாவட்ட ஆண்-பெண் பேச்சாளர்களும் கலந்து கொண்டனர், மாநில பேச்சாளர் ஜெய்லானி பிர்தௌஸி அவர்கள் மக்களின் கேள்விகளுக்கு பதில் கூறினார்கள்.

ஒவ்வொரு வாரமும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பும்.அதைத்தொடர்ந்து பயான்களும் நடத்திடவும். அப்பகுதியில் சத்திய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மக்களுக்கு தேவையான அரசாங்கம் தொடர்பான வழிகாட்டுதல்களையும், திருமண வயதில் இருக்கக்கூடிய பெண்களுக்கு உடன் அதற்கான பணிகளை மேற்கொள்வது என்றும் முடிவு செயய்யப்பட்டுள்ளது.