கோவை காட்டூர் கிளையில் நடைபெற்ற நூலக திறப்பு நிகழ்ச்சி

dsc01204dsc01201கோவை மாவட்டம் மேட்டுப்பாலயத்தில் அமைந்துள்ள TNTJ காட்டூர் கிளையில் கடந்த 25/10/2009 அன்று இஸ்லாமிய நூலக திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட செயாலாளர் சகோதரர்: முஹம்மத் ஃபாரூக் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் அன்றைய தினம் மார்க்க விளக்கப் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் TNTJ மாநில செயாலாளர் மௌலவி: கோவை ரஹ்மத்துல்லாஹ் MISc அவர்கள் “மனித நேயத்தை உயிர்பித்த இஸ்லாம்” என்ற தலைப்பில் மிக சிறப்பாக உரை ஆற்றினார்.

தமது உரையில் அறியாமை கால இருளிலிருந்து இஸ்லாம் எவ்வாறு மக்களை மனிதர்களாக–மனிதப்புநிதர்களாக மாற்றியது என்பதை மிக உருக்கமாக எடுத்துரைத்தார். இன்னும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளை போல் சித்தரிக்கும் இந்த காலத்தில் இஸ்லாம் உண்மையிலயே எவ்வாறு மனித நேயத்தை ஊக்கிவிக்கிறது என்பதை மிக எளிமையாக விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 30 பெண்கள் உள்பட 70 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி பிரசமுதய மக்கள் அதிக வாழும் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அவர்கள் மத்தியில் இஸ்லாம் குறித்த தவறான எண்ணங்களை அகற்றும் வகையில் அமைந்திருந்தது- அல்ஹம்துலில்லாஹ்!

இறுதியில் நூலகத்தின் அம்சங்களையும் அதன் அவசியத்தையும் TNTJ காட்டூர் கிளை தலைவர் சகோதரர் அப்துல் ரஷீத் விளக்கினார். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை TNTJ காட்டூர் கிளை நிர்வாகிகள் மிக சிறப்பாக செய்திருந்தனர்