கோவை காட்டூர் கிளையில் நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்

Image0759Image0752தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக வருட வரும் பல்வேறு கிளைகளின் சார்பாக “தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? ” என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இதன் மூலம் கல்வி-வேலை வாய்ப்புகளில் பின் தங்கியுள்ள இஸ்லாமிய மக்கள் மத்தியில் மிக பெரிய எழுச்சி ஏற்பட்டு வருகிறது. மேலும் இது போன்ற பயிற்சி வகுப்புகளுக்கு அதிக பணம் செலவாவதால் மாற்று மதத்தை சேர்ந்த ஏழை மாணவ மாணவியர்களுக்கும் இத்தகைய அறிவுரைகளும் பயனுள்ள தகவல்களும் சென்றடைவதில்லை.

இத்தகைய நிலமையை மாற்றும் வண்ணமாக TNTJ காட்டூர் கிளை சார்பாக கடந்த 24.01.2010 அன்று மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் அமைந்துள்ள “ராணி மஹால் கல்யாண மண்டபத்தில்” மாணவ மாணவிகளுக்கான “தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?” என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் TNTJ காட்டூர் கிளை மாணவர் அணி செயலாளர் சகோதரர்: நவாஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.

இதில் TNTJ காட்டூர் கிளை தலைவர் சகோதரர்: அப்துல் ரஷீத் அவர்கள் “இஸ்லாத்தில் கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இதில் ஏக இறைவன் தமது திரு மறையில் கல்வியை வலியுர்த்தும் வண்ணமாக அருளிய வசங்களை எதுத்துரைதார். மேலும் இஸ்லாமியகள் மத்தியில் கல்வியின் அவசியத்தை விளங்காததால் ஏற்படும் தீமைகளையும் பட்டியலிட்டார். இதனை தொடர்ந்து TNTJ மாநில மாணவர் அணி செயலாளர் சகோதரர்: சித்திக் M.Tech., அவர்கள் “தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?” என்ற தலைப்பில் பயனுள்ள பல தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்.

மேலும் எதிர் வரும் பொதுத்தேர்வில் எத்தகிய யுக்திகளை கையாள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 50௦ மாற்று மத மாணவ மாணவிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.