கோவை காட்டூர் கிளையில் நடைபெற்ற தர்பியா முகாம்

DSC04468இஸ்லாமிய சமுதாயத்தின் தூண்களாக இருக்கும் இளைன்ஞர்களை நல வழி படுத்த கோவை மாவட்டம் TNTJ கிளையின் சார்பாக பல்வேறு நல்ஒழுக்க பயிற்சி நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. கடந்த 27-12-2009 அன்று மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள ILFA லாட்ஜ் கம்யுனிட்டி ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு TNTJ காட்டூர் கிளையின் துணை தலைவர் சகோதரர்: யாசிர் அராஃபாத் அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் TNTJ மாநில செயலாளர் மௌலவி: கோவை ரஹ்மத்துல்லாஹ் MISc அவர்கள் “அழைப்பு பனியின் அவசியம்” என்ற தலைப்பில் தர்பியா நடத்தினார்.

இதில் அழைப்பு பனியின் அவசியத்தை பற்றியும், அதனால் நாம் அடையும் பலன்களை பற்றியும், இறைவன் இடத்தில கிடைக்கும் கூலியை பற்றியும் அழகாக எடுத்துரைத்தார். அதே போல் அழைப்பு பனி செய்யாமல் தோய்வடைந்தால் ஏற்படும் தீமைகளை பற்றியும், நாம் அடையும் நஷ்டத்தை பற்றியும் குர்ஆண் – ஹதீஸ் ஒளியில் எடுத்துரைத்தார்.

மேலும் அழைப்பாளர் இடத்தில இருக்க வேண்டிய பண்புகளையும், கையாள வேண்டிய யுக்திகளையும் மிக சிறப்பாக பட்டியல் இட்டார். இறுதியில் நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்காக மட்டும் இருக்க வேண்டும் என்ற நசிய்யத்துடன் நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 70 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இறுதியாக மாணவர் அணி செயலாளர் சகோதரர்: நவாஸ் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்.