கோவை காட்டூர் கிளையில் நடைபெற்ற தஃவா நிகழ்ச்சி

IMG0246AIMG0257AIMG0255AIMG0252AIMG0249AIMG0246Aகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள TNTJ காட்டூர் கிளையின் சார்பாக பல்வேறு தாவா நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளயத்தை சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

கடந்த ஞாயிறு 13/12/2009 அன்று TNTJ காட்டூர் கிளையின் சார்பாக குருமனூர் கிராமத்தில் தாவா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு TNTJ காட்டூர் கிளை துணை தலைவர் சகோதரர்: யாசிர் அராஃபத் தலைமை தாங்கினார். காலை 10மணிக்கு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் TNTJ காட்டூர் கிளை தலைவர் சகோதரர்: அப்துல் ரஷீத் அவர்கள் “இஸ்லாம் ஒரு அறிமுகம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

அவர் தமது உரையில் ஜாதி மற்றும் தீண்டாமை ஒழிப்புக்கு இஸ்லாம் ஒன்றே தீர்வு என்று அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தார். மேலும் இஸ்லாம் கூறும் மறுமை வாழ்க்கை பற்றியும் இதை நம்புவதால் மனித குலம் அடையும் நன்மைகளையும் மிக அழகாக பட்டியல் இட்டார். அதே போல் இந்த உலகில் நேர்மையுடனும் பொறுமையுடனும் வாழும் மக்களுக்கு ஏக இறைவன் வழங்க உள்ள சுவர்கத்தை பற்றியும் குர்ஆன்- ஹதீஸ் ஒளியில் விளக்கினார். மக்கள் மிக ஆர்வத்துடன் சொற்பொழிவை கேட்டனர்.

இதை தொடர்ந்து மாற்று மத நண்பர்களுக்கு இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளை பற்றியும், முஸ்லிம்களின் நடவடிக்கைகளை பற்றியும் இஸ்லாமிய மார்க்கத்தின் வழிபாட்டு முறைகளை பற்றியும் கேள்வி எழுப்ப அனுமதிக்கப்பட்டது. பல சகோதர சகோதரிகள் மிக ஆர்வத்துடன் தமது கேள்விகளை முன் வேய்தனர்.

அவர்களின் கேள்விகளுக்கு சகோதரர் அப்துல் ரஷீத் அவர்கள் மிக எழுமையான முறையில் பதில் அளித்தார். இறுதியாக சுமார் 100 மாற்று மதத்தவர்களுக்கு விருந்து பரிமாரப்பட்டது. இந்த நிகழ்ச்சி அந்த கிராம மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது. ஏற்கனவே இதே கிராமத்தை சேர்ந்த 2 சகோதர்கள் (ரவி (எ) ரஃபி, ரகு (எ) அப்துர் ரஹ்மான்) இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் இந்த இரு சகோதர்கள் நிகழ்ச்சியை மிக சிறப்பாக ஒருங்கிணைத்தனர். TNTJ காட்டூர் கிளையின் மாணவர் அணி செயலாளர் சகோதரர்: நவாஸ் அவர்களின் நன்றி உரை உடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது