கோவை காட்டூர் கிளையில் நடைபெற்ற மாணவர்களுக்கான தர்பியா முகாம்!

DSC01212கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள TNTJ காட்டூர் கிளையின் சார்பாக ஏராளமான தாவா நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஞாயிறு 15.11.2009 அன்று மாணவர்களுக்கான சிறப்பு தர்பியா காட்டூர் பகுதியில் அமைந்துள்ள TNTJ நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் TNTJ காட்டூர் கிளை தலைவர் சகோதரர்: அப்துல் ரஷீத் அவர்கள் “ஏகத்துவத்தின் அடிப்படை” என்ற தலைப்பில் தர்பியா (பயிற்சி) நடத்தினார்.

இதில் ஏக இறைவனின் தன்மைகளை பற்றியும், இறைவனின் பார்வையில் மன்னிக்க முடியாத பாவம் – அவனுக்கு இனைகர்பிக்க படுவது என்பதையும், இதை புறக்கணிக்கும் முஸ்லிம்களின் மறுமை நிலையை பற்றியும் திரு குர்ஆன் மற்றும் நபிவழியின் ஒளியில் மிக தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் “திரு குர்ஆண்” இறை வேதம் என்பதற்கான சான்றுகளையும், மார்க்கத்தில் ஹதீஸ்களின் முக்கியவதுவத்தையும், மார்க்கத்தில் நுழைந்த பித்அத்களையும் பட்டியல் இட்டார். இதை மிக ஆர்வத்துடன் மாணவர்கள் கேட்டு பயன் பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை TNTJ காட்டூர் கிளை நிர்வாகிகள் மிக சிறப்பாக செய்திருந்தனர்.