கோவை காட்டூர் கிளையின் சார்பாக காரனூர் கிராமத்தில் நடைபெற்ற தஃவா நிகழ்ச்சி

IMG0020AIMG0018Aகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள TNTJ காட்டூர் கிளையின் சார்பாக பல்வேறு தாவா நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளயத்தை சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

சுமார் 10௦ ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை தழுவிய காரனூர் கிராம மக்கள் சரியான வழிகாட்டுதல் இன்றி தவித்து வந்தனர். கொள்கை அளவில் இஸ்லாத்தை ஏற்று கொண்ட இந்த கிராமத்து மக்களில் பலர் இஸ்லாத்தின் அடிப்படையை விளங்காமல் இருந்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக கோவை மாவட்டத்தை சேர்ந்த தாயிகள் பல்வேறு மார்க்க விளக்க நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.கடந்த ஞாயிறு 17/01/2010 அன்று TNTJ காட்டூர் கிளையின் சார்பாக காரனூர் கிராமத்தில் தாவா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு காரநூர் பகுதியை சேர்ந்த சகோதரர் இப்ராஹீம் அவர்கள் தலைமை தாங்கினார். காலை 10 மணிக்கு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் TNTJ காட்டூர் கிளை தலைவர் சகோதரர்: அப்துல் ரஷீத் அவர்கள் “இஸ்லாம் கூறும் நரகம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் 3 சகோதரர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது