கோவை கலவரத்தில் ஈடுபட்ட காவல்துறையினரை கண்டறிந்து தண்டிப்பதற்கு உண்மை விசாரணை வேண்டும்

கோவை கலவரத்தில் ஈடுபட்ட காவல்துறையினரை கண்டறிந்து தண்டிப்பதற்கு உண்மை விசாரணை வேண்டும் தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.

கடந்த 1997ஆம் ஆண்டு கோவையில் கான்ஸ்டபிள் செல்வராஜ் கொலை செய்யப்பட்டதை டிசம்பர் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப் பெரிய கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது.

இந்தக் கலவரத்தில் சங்பரிவார கும்பலால் பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

முஸ்லிம்களுக்கு சொந்தமான பல நூறு கோடி மதிப்பிலான சொத்துக்கள் சூறையாடபட்டு வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டன.

19 அப்பாவி முஸ்லிம்களை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

சங்பரிவார கும்பலோடு காவல்துறையினரும் கைகோர்த்துக் கொண்டுதான் இந்தக் கலவரத்தை நடத்தினர் என்று முஸ்லிம்கள் கூறினோம்.

முஸ்லிம்களின் இந்த எண்ணத்தை உண்மைப்படுத்தும் வகையில் ”கோவை கலவரத்தை நடத்தியது பா.ஜ.க.வோ இந்து முன்னணியோ அல்ல காவல்துறைதான் நடத்தியது.

கலவரத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் ஒருவரை கூட நாங்கள் காட்டிக் கொடுக்கவில்லை என்று பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவையில் பேசியுள்ளார்.

இவரது பேச்சில் நாங்கள் காட்டிக் கொடுக்கவில்லை என்பதன் மூலம் காவல்துறையினரும் கூட்டுச் சேர்ந்து கோவை கலவரத்தில் ஈடுபட்டுள்ளது என்பதை பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

காவல்துறையின் சமீபத்திய செயல்பாடுகளும் அப்பாவி மக்கள் மீதான அடக்குமுறையை கட்டவிழ்ப்பதாகவே உள்ளன என்பதையும் இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.

பொது மக்களை பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள காவல்துறையினரே அப்பாவிகளை கொல்கிறார்கள் என்ற கலவர பீதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது. காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

முஸ்லிம்களின் அச்சத்தை போக்கும் வகையில் கோவை கலவரம் குறித்து உண்மை விசாரணை நடத்தி கலவரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினரை விசாரித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
இ.முஹம்மது
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

ஊடக தொடர்புக்கு:9789030302