கோவை ஆசாத் நகரில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக புதிய நூலக திறப்பு நிகழ்ச்சியும் மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டமும் கடந்த ஞாயிற்று கிழமை 01-03-2010 மாலை 7:00 மணிக்கு கரும்புக்கடை பள்ளி தெருவில்  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் காஜா ஹுசேன் தலைமை தாங்கினார். சகோதரர் A.W நாசர் அவர்கள் ஈமானில் உறுதி என்ற தலைப்பிலும் மௌலவி M.S.சுலைமான் புதிய கொள்கைகளை சொல்பவர்கள் யார் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 700 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் .

மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் . கிளை நிர்வாகிகள் நிகழ்ச்சி ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தனர்