கோவையி்ல் நடைபெற்ற பெண் தாயிக்களுக்கான தர்பியா முகாம்

DSC011812DSC01175தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கடந்த 13-02-2010 சனிக் கிழமை  அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கோவை குனியமுத்தூரில்  கோவை மாவட்டத்தில் உள்ள பெண் தாயீகளுக்கான (பேச்சள்ளர்களுக்கான ) தர்பியா வகுப்பு நடைபெற்றது.

இதற்கு தாயிக்களுக்கான பொறுப்பாளர் மாவட்ட துணை செயலாளர் சகோதரர் சகாபுதீன் அவர்கள் தலைமை தாங்கினார்.

மௌலவி M.I சுலைமான் ஹதீஸ் கலை மற்றும் தாவா செய்யும் வழிமுறை மற்றும் நாம் மேற்கொள்ள வேண்டிய அனுகுமுறை பற்றி பயிற்சி அளித்தார்.

இந்த தர்பியாவில் 20 க்கும் மேற்பட்ட பெண் தாயிக்ககள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மதிய உணவிற்கு பிறகு தாயிக்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது .

மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.குனியமுத்தூர் கிளை சகோதரர்கள் இந் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்