கோவையில பூகம்ப பீதி , கலக்டரிடம் மனு – கோவை TNTJ

கடந்த சில மாதங்களாக கோவையில் பரபரப்பாக பேசப்படகூடிய விசயம் கோவையில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படபோகிறது என்பதை பற்றி தான். அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இது தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இருந்தும் கோவை மாவட்ட நிர்வாகத்திடம் (ஆட்சியர் அலுவலகம்) இருந்து இது தொடர்பாக எந்த மறுப்போ, உறுதி படுத்துதலோ வரவில்லை.

எனவே TNTJ கோவை மாவட்டத்தின் சார்பாக 17.11.2011 அன்று மாவட்ட ஆட்சியர் கருணாகரனை சந்தித்து இது குறித்து மனு கொடுக்கப்பட்டது, மாவட்ட ஆட்சியரை மாவட்ட தலைவர் ஜலால் அஹ்மத், மாவட்ட செயலாளர் நவ்சாத், மாவட்ட பொருளாளர் ஹாரிஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.