கோவையில் நடைபெற்ற மாவட்டப் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாஅத் கோவை மாவட்டத்தின் பொதுக்குழு ஆத்துப்பாலம் SMM மஹாலில் கடந்த 11.04.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் முஹம்மத் அலி அவர்கள் தலைமை தாங்கினார்கள். மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் கோவை அப்துர்ரஹீம் அவர்கள் ஜுலை 4 மாநாடு தொடர்பான விளக்கங்களை அளித்தார்கள். பின்பு மாநில துணைத் தலைவர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் மாநாடு தொடர்பாக கிளைகள் இதுவரை செய்த பணிகள் பற்றி கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து காலியாக இருந்த மாவட்ட செயலாளர் பொருப்புக்கு தேர்வு நடைபெற்றது இதில் மாவட்ட பொருளாளராக இருந்த நவ்சாத் அவர்கள் ஒருமனதாக மாவட்ட செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார், மாவட்ட பொருளாளராக ரோசன்அஸ்ரப் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார் அல்ஹம்துலில்லாஹ்.