கோவையில் நடைபெற்ற பெண் தாயிக்களுக்கான தர்பியா முகாம்

கோவையில் நடைபெற்ற பெண் தாயிக்களுக்கான தர்பியா முகாம்05.07.2009 ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட பெண் பேச்சாளர்களுக்கான தர்பியா கோவை உக்கடம் பிலால்நகரில் காலை 10-மணி முதல் மாலை 5-மணி வரை நடைபெற்றது.

மாவட்டத்தின் அனைத்து பெண் பேச்சாளர்களும் கலந்து கொண்டு அனைத்து நிறை-குறைகளையும் தெரிவித்தனர். ஒரு சில தலைப்புகளில் பேசி ஆண் பேச்சாளர்களுக்கு நாங்கள் இணையானவர்கள் என்று திறமைகளையும் நிருபித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

மாநிலதுணைத்தலைவரும் மாநிலபேச்சாளருமான M.I சுலைமான் அவர்கள் கலந்துகொண்டு பேச்சாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தும் பல ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கியும் சிறப்பித்தார்கள். மாவட்டபேச்சாளரும் மாவட்டதுணை செயலாளர்களுமான சஹாப்தீன்-நவ்சாத் உடன் இருந்தனர்.

ரமலானுக்கு 40 நாட்களே இருக்கும் நிலையில் இத்தர்பியா மாவட்ட தாவா பணிகளுக்கு பயனுள்ளதாக அமைந்தது குறிப்பிடதக்கது.