கோவையில் நடைபெற்ற பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு!

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கோவை மாவட்டத்தில் பெண் தாயிகளை உருவாக்க கடந்த வாரம் 25-02-2010 புதன் கிழமை  பேச்சாளர் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது.  இதில் மௌலவி M.I சுலைமான் அவர்கள் பெண்களுக்கு பேச்சு பயிற்சி வழங்கினார்கள். தாயிக்களின் பொறுப்பாளர் மாவட்ட துணைச் செயலாளர் சஹாபுதீன் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.

பெண்கள் மத்தியில் பிரச்சாரம் தீவிரபடுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற பயிற்சி வகுப்பு கோவை மாவட்டத்தில் நடத்தப்படுகின்றது.