கோவையில் நடைபெற்ற டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

text (1)Copy of text (1)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத் கோவை மாவட்டத்தின் டிசம்பர்-6 ம் நாள் கண்டன ஆர்பாட்டம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் சிறப்பாக நடைபெற்றது.

06.12.2009 ஞாயிற்றுக்கிழமை நன்பகல் 12 மணிக்கு ஆர்பாட்டம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தும் காலை 11-மணி முதல் மக்கள் வெள்ளம்போல் திரண்டனர், ஆண்களும்-பெண்களும் குழந்தைகளும் என ஆயிரக்கனக்கானோர் கலந்துகொண்ட ஆர்பாட்டத்தின் தலைமை உரையை மாவட்ட தலைவர் அ.முஹம்மத்அலி அவர்களும், அதைத்தொடர்ந்து மக்களின் கண்டன கோசங்களும் அமைந்தன. கண்டன உரையை மாநிலசெயலாளர் மௌலவி ஆர்.ரஹ்மத்துல்லாஹ் நிகழ்த்தவும். நன்றியுரையை மாவட்ட பொருளாளர் காஜா அவர்களும். மக்களுக்கான நிகழ்ச்சி வழிகாட்டுதலை மாவட்ட செயலாளர் உமர்பாரூக் அவர்களும், பத்திரிக்கையாளர்களை மாவட்ட துணைசெயலாளர் நவ்சாத் அவர்களும், கோசங்களுக்கான ஒழுங்குமறையை மாவட்ட துணைசெயலாளர் சஹாப்தீன் அவர்களும், மக்களின் குடிநீர் தேவையை மாவட்ட துணைதலைவர் ஜலால்அஹ்மத் அவர்களும், ஒழுங்குபடுத்தும் நிகழ்ச்சியை மாவட்டதுணைசெயலாளர் முஜிபுர்ரஹ்மான் அவர்களும்-மாவட்டமருத்துவசேவைஅணிசெயலாளர் சுல்தான் அவர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

கிளையில் இருந்து ஆயிரக்கனக்கான மக்களும் கிளை நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது:

ஹிந்து

மாலைமலர்

தினத்தந்தி