கோவையில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டதின் மருத்துவ சேவை அணியும் அல் மினார் ஆயுர்வேத பார்மஸியும் இணைந்து இலவச ஆயுர்வேத பொது மருத்துவ முகாமை கடந்த 02-10-2010 அன்று நடத்தியது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுமத சகோதரர்கள் உட்பட 200கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மேலும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டது.

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக . கோவை மாவட்ட தவ்ஹீத் மர்கஸுக்கு (மாவட்ட தலைமை) பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த காவல் துறையினரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இதில் வருகை பதிவை மருத்துவ சேவை அணி செயலாளர் ரியாஸ் மற்றும் வர்த்தக அணி செயலாளர் சுல்தான் ஆகியோர் கண்காணித்தனர்.
மாவட்ட தலைவர் ஜலால் அஹ்மத் தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் நவ்ஷாத் முன்னிலையில் அல்லாஹ்வின் கிருபையால் இந்நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது