கோவலம் தர்ஹாவில் இணைப்பிற்கு எதிராக நோட்டிஸ் – பாலவாக்கம்

காஞ்சி கிழக்கு மாவட்டம் பாலவாக்கம் கிளை சார்பாக கோவளத்தில் உள்ள மிக பிரபலமான தமீம் அன்சாரி தர்காவில் கடந்த 12.11.11 சனிக்கிழமை மற்றும் 13.11.11 ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தனக் கூடு மற்றும் உரூஸ் முபாரக் விழா நடத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சிகளில் உள்ள அனாச்சாரங்களையும் அதனால் மறுமையில் ஏற்படும் விளைவுகளையும்  அந்த இரண்டு நாட்களில் தர்காவிற்கு செல்லும் பேருந்துகளிலும்,  தர்காவில் கூடுபவர்களிடத்திலும் விளக்கி நோட்டிஸ் கொடுத்து தஃவா செய்யப்பட்டது.

ஏராளமான பகுதி மக்களை ஒரே இடத்தில் சந்தித்து இணைவைப்பை தடுக்க கிருபை செய்த ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.