கோட்டை கிளையில் வித்தியாசமான முறையில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை மாவட்டம் கோட்டை கிளை சார்பில் 30.05.2010 அன்று வித்தியாசமான  முறையில் ஜுலை 4 மாநாடு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் டாக்டர் , நீதிபதி , ராணுவ வீரர் , கப்பல் படை தளபதி ஆகியோரின் உடைகளை அணிந்து குழந்தைகள் தெருக்களில் அணிவகுத்து செல்ல , பின்னால் வாகனத்தில் ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையை விளக்கக் கூறப்பட்டது.

காலை 11 மணி மணிக்கு ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்  இரவு 7 மணிவரை நடைபெற்றது.

எல்லா இடங்களிலும் ஆண்களும் பெண்களும் ,குழந்தைகளும் மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்றனர்.

இந்த ஏற்பாட்டை கோட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் .