கோட்டகுப்பம் ரஹ்மத் நகரில் தீவிபத்து: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்த TNTJ நிர்வாகிகள்

dsc06975dsc06981dsc06974dsc06954அஸ்ஸலாமு அலைக்கும், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் ரஹ்மத் நகரில்  .10.2009 மாலை 7.00 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் சுமார் 50 க்கு மேற்பட்ட குடிசைகள் எரிந்து விட்டது. இரவு நேரம் என்பதால் சரியாக கணக்கு எடுக்க முடியவில்லை.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகர கிளை சகோதரர்களும், நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர் ஆகியோர் களப்பணி ஆற்றினார்கள்.

புதுவை மாவட்ட நிர்வாகிகளும், சுல்தான் பேட்டை கிளை சகோதரர்களும், மாநில செயலாளர் ஜின்னா தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்;.

சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் நிவாரணப்பணியை தாமதப்படுத்தாமல் விரைவுபடுத்தும் படி வழியுறுத்தினர்.