கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா – தங்கச்சிமடம் கிளை

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் தங்கச்சிமடம் கிளை சார்பாக 23-05-2015 அன்று இரவு 7 மணியளவில் தவ்ஹீத் மர்கஸ் முன்பாக மாபெரும்  கோடைகால பயிற்சி முகாம்-2015 நிறைவு விழா & பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சூரா, துஆக்கள், கலந்துரையாடல், கேள்வி பதில் மாணவ மாணவிகளின் பயான் என பல அம்சங்களுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை சகோதரர் ரஹ்மான் அலி அவர்கள் தொகுத்து வழங்கினார். இதில் கிளை தலைவர் அஜ்மல் கான் தலைமை தாங்கினார் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். ஏராளமான பெற்றோர்கள் தாய்மார்கள் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.