கொச்சியில் விவாதத்தை எப்பொழுது வைத்துக் கொள்ளலாம் ? – சானிற்கு பகிரங்க சவால்!

சான் குழுவினருக்கு கடந்த 28-2-2012 அன்று அனுப்பபட்ட மின்னஞ்சல் கடிதம்:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்ளாத எல்லாம் வல்ல ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

சான் குழுவினருக்கு,

உங்கள் கடிதத்தில் ஏராளமான பொய்களும் புரட்டுகளும் உள்ளன. அந்தக் கடிதத்துக்கு விரிவான பதிலை பின்னர் அனுப்புகிறோம்.

கிறிஸ்தவமும் அதன் வேதமான பைபிளும் பொய்யானவையும் பொய்யர்களின் கற்பனையும் ஆகும். இஸ்லாமும் உலகத்துக்கு இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதமான புனிதக் குர்ஆனும் உண்மையானவையாகும். அனைத்தையும் படைத்த அதிபதியாகிய ஏக இறைவனிடமிருந்து வந்தவையாகும். இதை ஏற்கனவே நடைபெற்ற ,

பைபிள் இறைவேதமா? மற்றும் குர்-ஆன் இறைவேதமா? ஆகிய இரு விவாதங்களின் போதும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விட்டோம். அச்சத்தால் அலறியடித்து நீங்கள் ஓடியதையும் மக்கள் அறிவார்கள்.

அய்யோ விட்டுவிடுங்கள் என்று அலறிக்கொண்டு ஓடுபவர்களை நாங்கள் விட்டு விடுவோம். விரட்டிச் சென்று அடிக்க மாட்டோம். ஆனால் நான் ஓடவில்லை, நான் ஓடவில்லை என்று அகம்பாவத்தோடு கத்திக் கொண்டு ஓடுபவர்களை அடக்காமல் விடமாட்டோம். அவர்கள் பயந்துதான் ஓடுகிறார்கள் என்பதை நிரூபிக்காமல் விடமாட்டோம்.

எனவே, ஓடி ஒளிந்தது யார் என்ற தலைப்பில் விவாதம் செய்தே ஆக வேண்டும். அல்லது சான் தான் ஓடியது என்பதை நீங்கள் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். அதுவரை நாங்கள் உங்களை விடுவதாக இல்லை.
இரண்டாவதாக நடந்து முடிந்த குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பிலான விவாதத்தைக் காரணம் காட்டி அடுத்தடுத்து நடக்க வேண்டிய விவாதங்களிலிருந்து நீங்கள் ஓட முயலுகிறீர்கள். அதற்கும் நாங்கள் உங்களை விடுவதாக இல்லை.

 • ஆகவே, உங்கள் கொச்சியிலேயே வந்து மீண்டும் ஒரு முறை குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பில் விவாதிக்கத் தயாராக உள்ளோம். ஏற்கனவே நடந்த இந்த விவாதத்தை நாங்கள் லைவ் ரிலே பண்ணினோம். அதை நீங்கள் முழுமையாகப் பார்த்தீர்கள். முடிந்தால் அதற்குப் பதில் தயாரித்து வாருங்கள்.
 • இந்த விவாதம் முடிந்த மறு வாரம் சனி ஞாயிறுகளில் ஓடி ஒளிந்தது யார் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற வேண்டும்.
 • போலீஸ் அனுமதியைப் பெறுவதற்கு நீங்கள் தனித்தே பொறுப்பேற்றதால் நீங்களே முறையான அனுமதியைப் பெற்று விவாதம் நடக்கும் தேதிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாக அதன் ஒரிஜினலை எங்களுக்கு அனுப்பித் தரவேண்டும்.
 • எங்கள் தரப்பில் 150 நபர்கள் கலந்து கொள்வார்கள். (அவர்கள் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு வசதியாக போலீஸ் அனுமதியைப் பதினைந்து நாட்களுக்கு முன்னரே தர வேண்டும்.)
 • காவல்துறையில் அனுமதி பெறும் போது முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இந்த தலைப்பில் நடத்தப்படும் விவாதத்துக்கு அனுமதி என்று தெளிவாக இருக்க வேண்டும். தெளிவற்ற முறையில் ஏதோ ஒரு நிகழ்ச்சி என்பது போல் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பின்னர் விபரம் தெரிந்தவுடன் அனுமதியை மறுக்கும் நிலை ஏற்படும்.
  சென்னையில் விவாதம் செய்ய நீங்கள் தயார் என்று சொன்னீர்கள். ஆனால் நேரடி ஒளிபரப்பு செய்ய போலீஸ் தடை விதித்துள்ளது என்றுதான் மறுத்தீர்கள். எனவே நீங்கள் வாங்கும் அந்த போலீஸ் அனுமதியில் தொலைக்காட்சியிலும் இன்டர்நெட்டிலும் நேரடி ஒளிபரப்புச் செய்யலாம் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
 • நீங்கள் ஒப்புக் கொண்டபடி இதற்கான செலவுகளை நீங்களே ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
  (மார்ச் 17, 18) அல்லது மார்ச் 24, 25) அல்லது (மார்ச் 31, ஏப்ரல் 1) அல்லது (ஏப்ரல் 7, 8 அல்லது ஏப்ரல் 14, 15 அல்லது (ஏப்ரல் 21, 22) அல்லது (ஏப்ரல் 28, 29) ஆகிய ஏதாவது தேதிகளில் உங்களுக்கு வசதியான தேதியைத் தேர்வு செய்து எங்களுக்கு தாமதமின்றி தெரிவிக்கவும்.
 • இதில் எந்தவொன்றை நீங்கள் ஏற்க மறுத்தாலும் நீங்கள் ஒடி ஒளிந்தீர்கள் உறுதிபட தெளிவாகிவிடும்.

உங்கள் ஒப்புதல் மெயிலை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்