கேஸ் வினியோக முறைகேட்டை கண்டித்து குடந்தையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

IMGA0218IMGA0247IMGA0214தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக 01.02.10 அன்று காலை 11 மணியளவில் கேஸ் வினியோக முறைகேட்டை கண்டித்து குடந்தையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் A.S.அலாவுதீன் அவர்கள் தலைமையிலும், சகோ.H.சர்புதீன் அவர்கள் மா.செயலாளர், சகோ.B.இம்தியாஸ் அவர்கள் மா.து. தலைவர், சகோ.M.சாகுல் அவர்கள் மா.து.செயலாளர், சகோ.H.சுவாமிமலை ஜாபர் அவர்கள் மா.தொண்டரணி செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சகோ.Z.நுஃமான் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக சகோ.A.ஷாஜஹான் அவர்கள் மா.து.செயலாளர் நன்றியுரை நிகழ்த்தினார்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் உள்பட சுமார் 300 பேர் கலந்துக் கொண்டனர்.

மாற்று மத சகோதரர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.