கேம்பலாபாத் கிளையில் இலவச மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் கேம்பலாபாத் கிளையில் கடந்த 6-2-11 அன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாம் திருவைகுண்டம் ஜாஸ் மெடிக்கல்ஸ் உடன் இணைந்து நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட துணை தலைவர் மவ்ஜூது சமான் மற்றும் கேம்பலாபாத் கிளை பொறுப்பாளர் ஹாஜா நஜிமுதீன் மற்றும் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இம்மருத்துவ முகாமில் டாக்டர் சுப்பையா அவர்கள் சளி, இருமல், இளைப்பு, போன்ற நோய்களுக்கும், டாக்டர் பெட்ரீசியா அவர்கள் பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் சிகிட்சை அளித்தார்கள்.

210 நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.