குவைத் TNTJ வின் மனித நேய உதவி

பதுக்கோட்டை மாவட்டம் கோபால பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த செய்யது முஹம்மதோவர்களின் மகன் சாகுல் ஹமீத் என்பவர் கடந்த ஒரு வருடமாக குவைத்தில் ஒரு வீட்டில் பனி புரிந்து வந்தார். அவரின் முதலாளி அவரை சவுதி எல்லையில் உள்ள பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் பணியில் ஈடு படுத்தி சம்பளம் கொடுக்காமல் பல கொடுமைகளுக்கு ஆளாக்கியுள்ளார்.

கொடுமை தாங்க முடியாமல் சகோதரர் சாகுல் ஹமீத் அங்கிருந்து தப்பித்து ஓடி வந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் குவைத் மண்டல தலைமை அளிவலகத்தில் தஞ்சம் புகுந்தார்.

அவரிடம் நடந்த சம்பவங்களை கேட்டு தெரிந்து கொண்ட நிர்வாகிகள் முதலில் பாதிக்கப்பட்ட அந்த சகோதரருக்கு கோபாலபட்டினம் கலந்தர் நைனார் முஹம்மது மூலம் முதலுதவி செய்யப்பட்டது.

பின்னர் அந்த சகோதரருக்கு இந்திய தூதரகம் மூலமாக சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொண்டு சகோதரர் தாயகம் செல்வதற்கான டிக்கெட் மற்றும் இதர செலவிற்காக கடந்த 9 -9 -2011 வெள்ளிகிழமை அன்று ரூபாய் 6500 வழங்கப்பட்டு சகோதரரை தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.