குவைத் TNTJ வின் மனித நேயப் பணி

குவைத்தில் வீட்டில் பனி புரிந்த அதிராம்பட்டினத்தை சேர்ந்த பர்வீன் பானு என்ற சகோதரிக்கு அந்த வீட்டின் உரிமையாளர் பெண்ணால் 16 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கப்பட்டு கொடுமை படுத்தப்பட்டார்.

இந்த பிரச்சனையிலிருந்து மீள்வதற்காக அந்த சகோதரி அதிராம்பட்டினத்தை சேர்ந்த இலியாஸ் என்ற சகோதரர் மூலம் தவ்ஹீத் ஜமாத்தின் குவைத் மண்டல தலைமையை தொடர்பு கொண்டார்.அவருக்கு அந்த பிரச்சனையிலிருந்து மீள்வதற்கான தக்க ஆலோசனை வழங்கப்பட்டது.

பின்னர் அந்த பெண் தாயகம் திரும்புவதற்காக கடந்த 11-9-2011 அன்று ரூபாய் 4250 வழங்கப்பட்டது.இந்த தொகையை அந்த பெண்ணிற்காக அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மீரா சாகிப் அவர்களின் மகன் சகோதரர் இலியாஸ் அவர்கள் பெற்றுக்கொன்டார். மேலும் அந்த பெண் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.