குவைத் TNTJ வின் மனித நேயப் பணி

இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை என்ற ஊரை சேர்ந்த சகோதரர் ராஜ் முஹம்மது என்பவர் கடந்த ஆண்டு குவைத்திற்கு செக்யூரிட்டி வேலை பார்ப்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் வந்தார்.

திருமணம் முடிந்து இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ள இவர் கடனால் கஸ்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. குடும்பத்தை பிரிந்து கடனையும் சுமந்துக்கொண்டு குறைந்த சம்பளத்தில் இங்கு வந்து கஸ்டப்படுகிறோமே என்ற கவலையில் தினமும் மனஉழைச்சலில் இருந்துள்ளார்.

இந்த மனக்கவலையே அவருடைய சுய நினைவை போக்கி இரண்டு நாள் முழுவதும் எந்த சாப்பாடு தண்ணீர் இல்லாமலும் பாத்ரூம் கூட போகாமலும் தூங்கிகொண்டிருந்ததால் அவருடைய அறையில் உள்ளவர்கள் அவசர எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளனர்.

அவசரப்பிறிவு மருத்துவர்களும் வந்து சோதித்து பார்த்துவிட்டு அவரை மருத்துவமனையில் சோ்த்துவிட்டனர். சுயநினைவு அவருக்கு திரும்பாததால் மருத்துவர்கள் அனைத்துவிதமான சோதனைகளையும் செய்து கொண்டிருந்தனர்.

தலைமை மூலம் இந்த தகவல் குவைத் மண்டல நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக இதற்கான தீர்வு காணும்படி அறிவுறுத்தப்பட்டது.

தகவல் கிடைத்த அன்றே மண்டல நிர்வாகிகள் தலைவர் ராஜா சரீஃப், செயலாளர் ஜின்னா, பொருளாளர் சம்சுதீன் மற்றும் துணை செயலாளர் அப்துல் ஹமிது ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

மருத்துவமனை ஊழியர்களோ முதலில் ஒத்துழைக்க மருக்கவே நம் ஜமாஅத்தைப்பற்றி சொன்னவுடன் இதை கேள்வியுற்ற செவிழியர் நமக்கு அந்த சகோதரைப்பற்றிய விபரங்கள் அனைத்தையும் கூறினார்.

நமது ஜமாஅத்தின் செயல்பாடுகளை உணர்ந்த அந்த செவிழியர் இந்திய மருத்துவரிடம் விளக்கினார் அதன் பிறகு அந்த சகோதரக்கு மூளை செயல்பாடு, நரம்பு செயல்பாடு மற்றும் இருதய செயல்பாடு போன்ற அனைத்திற்கும் உண்டான சோதனைகளை செய்து நம்மிடம் விளக்கினர்.

அவருடைய உடலில் எந்தவித குறைபாடும் இல்லை குறைகள் அனைத்தும் அவருடைய மனதளவில்தான் எனவே அதற்கு தனியாக மருத்துவம் இருக்கிறது என்று கூறினர்.

இது எதுவும் பாதிக்கப்பட்ட அந்த சகோதரருக்கு தெரியாது. மருத்துவமனை செல்வது அங்கு என்னென் சோதனைகள் செய்வது என்று அனைத்தையும் மண்டல பொருளாளர் சம்சுதீன் அவர்கள் கவனித்து வந்தார்.

அவரது உடல்நிலை தேருவது கடினம் எனவே அவரை தாயகம் அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள் என்று மருத்துவமனை ஊழியர்களும் அவரது குடுபத்தார்கள் மற்றும் துபாயில் பனிபுரியும் அவரது மச்சானும் கூட தாகத்திற்கு அனுப்பிவிடுங்கள் என்று கூறினர்.

ஆனால் அவரது நிலைமையை நேரில் பார்த்துக்கொண்டிருக்கும் மண்டல நிர்வாகிகள் இப்போது அவசரப்பட்டு தாயகம் அனுப்பவேண்டாம் இன்னும் கொஞ்ச நாள் இங்கேயே வைத்திருந்து மருத்துவம் செய்து பிறகு அனுப்புகிறோம் என்று அவரது குடும்பத்தார்களிடமும் மருத்துவர்களிடம் தாயகத்தில் இந்தளவு மருத்துவ உதவி கிடைக்காது இன்னும் கொஞ்சநாள் முயற்சி செய்யுங்கள் என அறிவுருத்தப்பட்டது.

இதற்கிடையே மண்டல செயற்குழுவில் இந்த சகோதரரின் உடல் நிலையையும் அவருக்காக அல்லாஹ்விடம் துவா கேட்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது. எல்லாம் வல்ல அந்த அல்லாஹ்வின் வல்லமையால் அந்த சகோதரர் சுயநினைவு திரும்பி உடல்நலமும் தேரினார். அதனைக்கண்ட மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களும் ஆச்சர்யமடைந்து அவருக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

அவருடைய நிலைமையை அவர் வேலை பார்க்கும் கம்பெனிக்கு விளக்கி இனிமேல் அவரால் வேலை பார்க்க முடியாது என்றும் எடுத்துக்கூறி அவருக்கு சேரவேண்டிய பணத்தை வாங்கி அவருடைய வங்கியில் சேர்த்தனர்.

மேலும் அவருக்கு விமான டிக்கட் ஜமாஅத் மூலம் ஏற்பாடு செய்து கடந்த 10.-10.2012 புதன் அன்று நல்லவிதமாக தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார். ”” வெளிநாடு செல்வோர் கவனித்திற்கு ”” என்ற தலைப்பில் சகோதரர் பீஜே பேசிய உரையை கேட்ட ராஜ்முஹம்மது அவர்கள் என் வாழ்க்கையை இனி புதிதாக தொடங்கப்போகிறேன் என்று கூறி சென்றது மண்டல நிர்வாகிகள் அவர் வாழ்க்கை நல்ல முறையில் அமைந்திட இறைவனை வேண்டினர் அல்ஹம்துலில்லாஹ்.