குவைத் TNTJ ஏற்பாடு செய்த நபிவழி உம்ரா பயணம்

img_0003img_0038img_0039img_0006குவைத் டிஎன்டிஜே தலைமையில் 8-7-09 முதல் 18-7-09 நாள் வரை உம்ராவிற்கு அழைத்துச் செல்லப்பட்டது.அங்கு நபிவழியில் உம்ரா கிரியைகளை முடித்து விட்டு அனைவரையும் நபிவழியில் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றும் இடங்களான மினா, அரபா மைதானம், முஸ்தலிபா, ஷைத்தானுக்கு கல்லெறியும் இடம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கி எடுத்துரைக்கப்பட்டதோடு வரலாற்றுப் பின்னனியைக் கொண்ட ஸவ்ர் குகை, ஹிரா குகை மற்றும் இஸ்லாமிய வரலாற்று அருங்காட்சியத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டது.

இந்த உம்ரா பயணத்தின் மற்றொரு பிரிவாக நன்மையை நாடி மஸ்ஜிதுன்னபவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு மதீனாவில் வரலாற்று பின்னனிகளைக் கொண்ட இடங்களான குபா பள்ளி, கிப்லத்தைன் பள்ளி, அகழ்போர், உஹதுப் போர், பத்ர் போர் ஆகியன நடந்த இடங்களுக்கும், 53 மொழிகளில் குர்ஆன் மொழியாக்கம் செய்யயப்பட்டு வருடந்தோறும் பல இலட்சக்கணக்கில் தயாரிக்கப்படும் பிரிண்டிங் பிரஸிற்கும் அழைத்துச் செல்லப்பட்டதோடு மக்கா மதீனா ஆகிய இரு இடங்களில் உள்ள வரலாற்றுப் பின்னனி சிறப்புகளைப் பற்றி குவைத் மண்டல தலைமை தாயி முகிப்புல்லாஹ் உமரி அவர்களின் சொற்பொழிவுகளும் நடந்தது.

இப்பயணத்தில் குவைத் மண்டலநிர்வாகிகள் ஜித்தா மண்டலத்தையும் மக்கா, மதீனா நிர்வாகிகளையும் சந்தித்து அழைப்புப் பணி பற்றிய கருத்துப்பரிமாற்றமும் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்.