குவைத் ஹதியா கிளையில் நடைபெற்ற சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி!

p9050464p9050467குவைத் ஹதியாவில் மப்ரத்துத் தவாஸில் கைரிய்யா லஜ்னாவும், தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் ஹதியா கிளையும் இணைந்து 7.09.2009 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரமலான் ஸஹர் நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள டி.என்.டி.ஜே மாநில பேச்சாளரும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ. அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் ரமலான் மாதத்தின் சிறப்புகளும் கடைபிடிக்க வேண்டிய அமல்களும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்குரிய ஏற்பாடுகளையெல்லாம் லஜ்னாவும், ஹதியா கிளை அஹமதும் மற்றும் கிளையினர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். வந்திருந்த அனைவருக்கும் ஸஹர் உணவும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்