குவைத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக கடந்த 16-11-2010 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். முஹிப்புள்ள உமரி அவர்கள் பெருநாள் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.