குவைத் ரவ்தா கிளையில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி

குவைத் மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரவ்தா கிளை சார்பாக கடந்த 29-08-2010 ஞாயிற்றுக் கிழமை சஹர் நேர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இரவு 12.30 மணிக்கு தொடங்கிய இக்கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி கலந்துக்கொண்டு இறையச்சம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

வந்திருந்த அனைவருக்கும் குவைத் மண்டல ரவ்தா கிளை சார்பாக சஹர் உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!