குவைத் முர்காப் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 29-7-2011 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலத்தின் 23 வது கிளையாக முர்காப் கிளை இனிதே உதயமானது.

அல்லாஹ்வின் உதவியால் குவைத் மண்டலத்தின் ஒரு பெரிய கிளைகளில் ஒன்றாக முர்காப் கிளை உருவாகியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

மண்டல நிர்வாகிகள் முன்னிலையில், இஸ்லாமிய கல்லூரியின் துணை முதல்வருமான சகோதரர் அப்துல் கரீம் Misc அவர்கள் தலைமையில் கிளை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த கிளையின் நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

தலைவர் : அப்துல் கரீம்
செயலாளர் : அப்துல் ரஷீத்
பொருளாளர் :அப்துல் ஜப்பார்
துணை தலைவர் :ஜெய்னுல் ஆபிதீன்
துணை செயலாளர் : ரம்ஸி
மருத்துவ அணி செயலாளர் : அப்துல் கரீம்
தொண்டர் அணி செயலாளர் : பீர் முஹம்மது