குவைத் மிஸ்ரஃப் பகுதியில் சிறப்பு சொற்பொழிவு

குவைத் மண்டலம் பயான் மிஸ்ரஃப் பகுதியிலுள்ள 9வது ஏரியா மர்யம் மஸ்ஜிதில் கடந்த 19-08-2011 வெள்ளிக்கிழமை மாலை அசர் தொழுகைக்குப்பின் மாபெரும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கிளைத்தலைவர் சகோ. இப்ராஹிம் அவர்கள் வரவேற்புரையாற்ற முதலாவதாக தாயத்திலிருந்து வருகை தந்திருக்கும் சகோ.சிராஜூதீன் ஃபிர்தௌஸி அவர்கள் கலந்துக்கொண்டு “தர்மம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அடுத்ததாக தாயத்திலிருந்து வருகை தந்திருக்கும் சகோ.அப்துல் கரீம் ( துணை முதல்வர், இஸ்லாமிய கல்லூரி மேளப்பாளையம்) அவர்கள் “ மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.இறுதியாக கிளை பொருளாளர் சகோ.ஜியாவுதீன் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பெணகள் 70 க்கும் மேற்பட்டோர் உட்பட சுமார் 550 போ் கலந்துக்கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு “மன்னரை வாழ்க்கை” என்ற புத்தகமும் ஆண்களுக்கு ”மனனம் செய்வோம்” என்ற சிறிய சூராக்கள் மற்றும் துவாக்கள் அடங்கிய புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.