குவைத் மர்யம் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி!

p9090043p9090040தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் இப்தார் நிகழ்ச்சி 11.09.2009 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பயான் மர்யம் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.

பயான் முஷ்ரிப் கிளையின் செயலாளர் ஜியாவுதீன் அவர்களின் வரவேற்புரையோடு தொடங்கியது. குவைத் மண்டல தலைமை தாயி முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் ஈமானை வலுப்படுத்த ஓர் வழி என்ற தலைப்பில் ஒவ்வொரு நிமிடமும் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொள்வதே ஈமானை வலுப்படுத்த ஓர் வழி என்று ஆவேசமாக ஆற்றிய உரை அனைவரையும் சிந்திக்க வைத்தது.

அதைத் தொடர்ந்து தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரார் டி.என்.டி.ஜே மாநில பேச்சாளர் அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் அலட்சியப்படுத்தப்படும் நபி வழிகள் என்ற தலைப்பில் நாம் அசட்டையாக தவறவிடும் நபிவழிகளை மிகவும் அழகுற சுட்டிக் காட்டினார்கள்.

சுமார் 200க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயான் முஸ்ரிப் கிளையினர் மிகவும் சிறப்பபாக செய்திருந்தார்கள். இறுதியாக குவைத் மண்டல துணை செயலாளர் ஜின்னா நன்றி கூறினார்.

இப்தார் உணவுடன் நிகழ்ச்சி பயனள்ளதாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்