குவைத் மண்டலம் சார்பாக கணிணி மற்றும் ஆங்கில பயிற்சி வகுப்பு

குவைத் மண்டலம் கல்விக் குழுவின் சார்பாக இலவச கம்புயூட்டர் பயிற்சி வகுப்பும், ஆங்கிலக் கல்வியும் கடந்த 17-12-2010 அன்று முதல் கற்றுக் கொடுக்கப் படுகிறது.

குவைத்தில் இருக்கக் கூடிய நம் சகோதரர்களில் பெரும்பாலானோர் டிரைவராகவே பனி புரிகின்றனர். இதில் வீட்டு டிரைவராக வேலை செய்பவர்களே அதிகம்.இப்படி டிரைவர் தொழிலையே நம்பி இருப்பவர்களுக்கு கூட அடிப்படை கம்புயூட்டர் கல்வி தெரிந்திருந்தால் தான் அதில் நீடிக்க முடியும் என்கிற ஒரு நிலை உருவாகி வருகிறது.

இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல கல்விக் குழு இலவச கம்புயூட்டர் பயிற்சி வகுப்பும், ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பும் குவைத் மர்கசில் நடத்தி வருகின்றார்கள்.

இதில் ஆரம்பத்திலேயே நாற்பது பேர் கலந்து கொண்டு பயன் பெறுகிறார்கள்.

இதைத் தொடர்ந்து நமது குவைத் மண்டல ஃபாஹில் கிளை அலுவலகத்திலும் முப்பது சகோதரர்கள் விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள் ஆகவே இன்ஷா அல்லாஹ் வருகிற வாரங்களில் நமது ஃபாஹில் மர்கசிலும் பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகளை நமது கல்விக் குழு பொறுப்பாளர்கள் சகோ ஹாஜா மைதீனும், ராஜ் முகம்மதுவும் அல்லாஹ்வின் பேருதவியால் மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள்.