குவைத் தய்யா கிளையில் நடைபெற்ற மார்க்க சொற்பொழி நிகழ்ச்சி

PC260174PC260167கடந்த 25-12-2009 வெள்ளிக்கிழமை குவைத் மண்டலம் தய்யா கிளை ஏற்ப்பாடு செய்திருந்த மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி இந்திய தூதரகத்திற்கு அருகாமையில் உள்ள மஸ்ஜிதுன் முகம்மது அகம்மது சபா வில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இஸ்லாத்தின் பார்வையில் முஹர்ரம் என்ற தலைப்பில் சகோதரர் அப்துல் கரீம் MISc அவர்கள் உரையாற்றினார்கள்.

முஹர்ரத்தை தவறாக புரிந்து வைத்ததால் ஏற்ப்பட்டிருக்கின்ற இன்றைய நவீன வழிகேடுகளை பட்டியலிட்டு முஹர்ரம் மாதத்தில் வைக்கும் நோன்பின் சிறப்பை விளக்கியது வந்திருந்த மக்களுக்கு அன்று நோன்பு நோற்க வேண்டும் என்ற என்னத்தை ஏற்ப்படுத்தியது அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்ச்சிக்கு இலங்கையை சார்ந்த சகோதரர்கள் உட்பட நூற்றி பத்து பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.அல்லாஹு அக்பர்.