குவைத் டிஎன்டிஜேவிற்கு குவைத் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் விருது!

– டிஎன்டிஜேயின் இரத்த தான சேவையைப் பாராட்டி வழங்கியது!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற இந்தப் பேரியக்கம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் தமிழகத்தைத் தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் தனது சீர்மிகு பிரச்சாரத்தின் வாயிலாகவும், தன்னலமற்ற மனிதநேயப் பணிகள் மூலமாகவும் மகத்தான எழுச்சி கண்டு வருகின்றது.

இந்தியாவைத் தாண்டி சவூதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, ஓமன், ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்த ஜமாஅத் கால்பதித்து அங்கும் ஏகத்துவப் பிரச்சாரங்களை செவ்வனே செய்வதோடு மகத்தான மனித நேயப் பணிகளையும் செய்து வருகின்றது.

அந்த வரிசையில் குவைத்தில் அவசர இரத்தத் தேவைக்காக அதிக அளவில் இரத்த தானம் செய்ததற்காகவும், 2012 ஆம் வருடம் அதிக யூனிட் இரத்த தானம் செய்ததற்காகவும் குவைத் சுகாதாரத் துறை அமைச்சகம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலத்திற்கு சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கியது. அந்த விருதை குவைத் சுகாதாரத் துறை அமைச்சர் முபாரக் அல் ஹைஃபி அவர்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி 13-6-2013 வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு குவைத் கிரவுன் பிளாஸா ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.

குவைத் மண்டல நிர்வாகிகள் விருதைப் பெற்றுக் கொண்டனர்.

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே….

IMG-20130614-WA0014 IMG-20130614-WA0013