குவைத் ஜஹ்ராவில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

11122009082

11122009080கடந்த 11/12/09 அன்று குவைத் மண்டல டிஎன்டிஜே, ஜஹ்ரா கிளை சார்பாக தமிழ் ஜூம்ஆ பள்ளியில் மாபெரும் மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்றது.

இதில் ஆண்களும் பெண்களுமாக 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அப்துல்கரீம் எம்.ஐ.எஸ்.ஸி ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அதில் மார்க்கத்தை கடைபிடிப்பதற்காக சொந்த ஊரை, நாட்டை எவ்வாறு தியாகம் செய்ய ஸஹாபாக்கள் முன்வந்தார்களோ அது போல் நாமும் இந்த மார்க்கத்திற்காக எதையும் தியாகம் செய்ய முன்வர வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியை டிஎன்டிஜே ஜஹ்ரா கிளை சகோதரர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் அன்று மக்ரிப் தொழுகைக்குப்பின் டிஎன்டிஜே குவைத் மண்டல மர்கஸில் கேள்வி பதிலுடன் மார்க்க உரை நடைபெற்றது. அதிலும் ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.