குவைத் ஜஹரா ஏரியாவில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஜஹரா ஏரியா பகுதியில் கடந்த 1-7-2011 வெள்ளிக்கிழமை அன்று மாபெரும் மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில பொது செயலாளர் சகோ கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலந்துக் கொண்டு அயல்நாட்டு வாழ்க்கையும் அர்ப்பணிப்பும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சி ஏற்ப்பாட்டினை ஜஹரா கிளை சகோதரர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

இதுவரை இல்லாத அளவிற்கு ஜஹரா ஏரியா கஸர் பகுதியில் உள்ள தமிழ் ஜும்மா பள்ளியில் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் பெரும் திரளாக கலந்துக் கொண்டது குவைத்தில் தவ்ஹீதின் எழுச்சியை பறைசாற்றுவதாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

நிகழ்ச்சி நடந்த அன்று குவைத்தில் புழுதி புயல் வீசியும் மக்கள் பெரும் திரளாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.