குவைத் ஏற்பாடு செய்த நபி வழி உம்ரா பயணம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி மண்டல தாயி முஹிபுல்லாஹ் உமரியின் தலைமையில் குர்ஆன் ஹதிஸ் வழிகாட்டுதலின் படி உம்ரா பயணம் மற்றும் மக்கா மதினா வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மார்ச் 24 புதன் கிழமை குவைத்திலிருந்து கிளம்பிய உம்ரா குழு முதலில் மக்கா சென்று முஹம்மது நபியவர்கள் காட்டித்தந்த சுன்னா முறைப்படி புனித உம்ராவை நிறைவேற்றினர்.

பல வரலாற்று இடங்களை மக்காவில் சுற்றிப்பார்த்த இவர்கள் 30 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதினா சென்றடைந்தனர்.மதினா கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த மார்க்க சொற்பொழிவில் சகோ.முஹிபுல்லாஹ் அவர்கள் கலந்துக்கொண்டு சொற்பொழிவாற்றினார்.

மதினாவில் வரலாற்று முக்கியத்துவம் இடங்களை பார்த்த இவர்கள் அல்லாஹ்வின் உதவியால் ஏப்ரல் 3 ஆம் தேதி குவைத் வந்தடைந்தனர்.

இப்பயனம் முழுவதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மார்க்க சொற்பொழிவும் வந்த மக்களுக்கு மார்க்க சந்தேகங்களை குர்ஆன் ஹதிஸ் முறைப்படி விளக்கியதும் உம்ரா சென்று வந்த அனைத்து மக்களுக்கும் மிக பயனுள்ளதாக அமைந்தது குறிப்பிதக்கது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!