குவைத் உம்முல் கைமானில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் உம்முல் கைமான் கிளை சார்பாக கடந்த 14-05-2010 வெள்ளியன்று மதியம் 1 மணிக்கு “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்“ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டாக்டர் நூருல் அமின் மற்றும் இன்ஞினியர் உசேன் பாபு முன்னிரலை வகித்தனர். குவைத் மண்டல தலைவர் ராஜா அஹமது சரீஃப் தலைமை தாங்கினார்கள்.

கிளை ஒருங்கினைப்பாளர் சகோ.ஆஜ் முஹம்மது அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.  மாற்று மத சகோதரர்களின் முற்றிலும் வித்தியாசமான கேள்விகளுக்கு குவைத் மண்டல தாயி முஹிபுல்லாஹ் உமரி அவர்கள் பதிலளித்தார்கள்.

நிகழ்ச்சியின் முடிவில் கிளைத்தலைவர் முஹம்மது பாஷா நன்றியுரையாற்றினார்.

கேள்விகள் கேட்ட 21 மாற்று மத சகோதரர்களுக்கு சகோ.பி.ஜெ.மொழிபெயர்த்த தமிழ் குர்ஆன் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகமும்,  இஸ்லாமிய டி.வி.டி க்களும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி எங்களிடம் இருந்த முஸ்லீம்கள் மீதான தவரான புரிதலை விளக்குவதாக இருந்தது என அனைத்து மாற்று மத சகோதரர்களும் தெரிவித்தது குறிப்பிடதக்கது. எல்லாப்புகழும் இறைவனுக்கே (அல்ஹம்துலில்லாஹ்).