குவைத் அஸ்ஸாவி கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலத்தின் அஸ்ஸாவி கிளையில் கடந்த  26-03-2010 வெள்ளிக் கிழமை அன்று இஸ்பிளியாவிலுள்ள ஜூம்மா பள்ளியில் மிகப் பெரிய பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மண்டல தலைமை தாயி சகோ.முஹிபுல்லாஹ் உமரி அவர்கள் அல்லாஹ் யாரை சபிக்கிறான் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும் மண்டல பேச்சாளார் சகோ.சிராஜ்தீன் ஃபிர்தௌஸி அவர்கள் ஏப்ரல் மாதம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.

வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.சுமார் 200 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்ச்சியை பல சிரமங்களுக்கிடையே அஸ்ஸாவி கிளையினர் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.